×

புயல் பாதித்த பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கிய தவ்கித் ஜமாத்

தொண்டி, நவ.21:  கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, நாகை மாவட்டத்தில் களத்தில் தவ்கித் ஜமாத்தினர் சேவை செய்து வருகின்றனர். ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்களையும் வழங்கியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை நிலை குலைய செய்த கஜா புயலால் நாகை, வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணி, அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தெருவில் நிற்கின்றனர். இப்பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட்டு பல நாட்களாக இன்னும் சீர் செய்ய வில்லை. மரங்கள் சாய்ந்து கிடப்பதை அப்புறப்படுத்த வில்லை. இதனால் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கரம்பக்குடி, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று தமிழ்நாடு தவ்கித் ஜமாத் ராமநாதபுரம் மாவட்டம் சார்பில் களத்தில் இறங்கி களப்பணி செய்தனர். மேலும் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கொசு வர்த்தி, மெழுகுதிரி, தீப்பட்டி, பிரட், பால் உள்ளிட்ட பொருள்கள் வழங்கினர். சாலை ஓரங்களில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்துவது, தேங்கியுள்ள மழை நீரை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் தொண்டி தவ்கித் ஜமாத்தினர் ஈடுபட்ட வருகின்றனர்.

Tags : Takhit Jamat ,area ,storm ,
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...